சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள் நியமனம்..

 
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆர். சக்திவேல், பி.தனபால், சி. குமரப்பன், கே. ராஜசேகர் ஆகிய 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் இருக்கக்கூடிய 4 நீதிபதிகளை  நியமிக்கக்கோரி கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் அமைப்பானது  பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கொலீஜியத்தின் இந்த பரிந்துரை மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.  அண்மையில் மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூவிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு, அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக கிடப்பில் உள்ள கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளை  மத்திய சட்டத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வருகிறது.. இதனையடுத்து  நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பல்வேறு நீதிபதிகள் நியமனத்திற்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.  

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகள் நியமனம்..
 
அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 4 நீதிபதிகளை நியமிக்க  தற்பொழுது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் நீதிபதிகளுடன் கூடுதலாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதால்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருக்கிறது. அதன்படி மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள  ஆர். சக்திவேல், பி.தனபால், சி. குமரப்பன், கே. ராஜசேகர் ஆகிய 4 நீதிபதிகள்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாஜ நியமிக்கப்பட்டுள்ளனர்.