4 விழாக்கள் - பிரதமர் மோடி 11ல் தமிழகம் வருகிறார்

 
m

பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தமிழகம் வருகிறார்.   நான்கு  விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரு மற்றும் தமிழகத்திற்கு வரும் 11ஆம் தேதி அன்று வருகை தருகிறார்.

 காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா,  காந்திகிராம 75வது பவள விழா,  வந்தே பாரத் ஐந்தாவது  அதிவிரைவு ரயில் தொடக்க விழா,  கெம்பேகவுடா சிலை திறப்பு விழா ஆகியவற்றின் பங்கேற்பதற்காக வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் கர்நாடகா வருகை தருகிறார்.

mm

 மகாத்மா காந்தியின் சீடர்களான டாக்டர் டி. எஸ் சௌந்தரம்,  டாக்டர் சி. இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே கடந்த 1947 ஆம் ஆண்டில் காந்தி கிராமத்தை உருவாக்கினார்கள்.   காந்தி கிராமத்தில் நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சமூகப் பணி, கல்வி ,சுகாதார மருத்துவம் ,வேலை வாய்ப்பு உள்ளிட்ட பணிகளையும் செய்து வந்தனர்.

 காந்திகிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தது.   இதை முன்னிட்டு காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா கொண்டாடப்படுகிறது . அது மட்டும் அல்லாமல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவும் நடைபெற இருக்கிறது.  இரு விழாக்களும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் வரும் 11ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

 பிரதமர் மோடி இந்த விழாக்களில் பங்கேற்று 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும்,  பல்வேறு பாடப் பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் தங்க பதக்கங்களையும் வழங்குகிறார்.  இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆ.ர் என். ரவி,  முதல்வர் மு. க .ஸ்டாலின்,  மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார்கள்.

 இந்த விழாவிற்கு வருவதற்கு முன்னதாக பெங்களூருவில் சென்னை- பெங்களூரு மைசூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.  அதன் பின்னர் பெங்களூருவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.  108 அடி உயர கெம்பே கவுடா சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் இருந்து 3 மணி அளவில் தனி விமான மூலம் மதுரை வருகிறார் பிரதமர் மோடி.  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் அருகே அம்பாத்துறையில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடு இறங்குதலத்திற்கு மாலை 4 மணி அளவில் செல்கிறார்.  அங்கிருந்து காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு காரில் பயணம் செய்கிறார் பிரதமர் மோடி.

 பிரதமர் மோடியின் வருகை முன்னிட்டு காந்திகிராம பல்கலைக்கழகம் நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன. ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று ஹெலிபேடுகளில் பராமரிப்புபணி நட்டந்து வருகின்றன.  பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம்,  ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .