சவுக்கு சங்கர் வழக்கில் 3வது நீதிபதி நியமனம்
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் 3வது நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவுப்படுத்தி யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாக கோவை போலீசார் கடந்த 5 ஆம் தேதி தேனியில் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் தனது வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதியப்பட்டுள்ளது. கோவை, தேனி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சிறைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து அவரது தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கினார். நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் 3வது நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.