3வது நாளாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

 
ev velu ev velu

மூன்றாவது நாளாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. 

raid

இந்த நிலையில், மூன்றாவது நாளாக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை அசோக் நகர், தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.