சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவா குவா சத்தம்? கொண்டாடும் ரசிகர்கள்

 
ff

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் அயலான் திரைப்படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்தார்.

dd

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்  தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அமரன் திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

tt

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் குடும்ப உறவினரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.  அந்த வீடியோவில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.  இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது.  ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும் , குகன் என்ற மகனும் உள்ளனர்.   

சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குழந்தை சத்தம் கேட்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதை அவரது ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடியும் , சிவகார்த்திகேயனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.