இந்திய தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிக்கனும்னு தெரியுமா??

 
India Post - இந்திய தபால்துறை


இந்திய தபால் துறையில் காலியாக உள்ள 38,926 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310  பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

இந்திய தபால் துறை ஒவ்வொரு ஆண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப  அறிவிப்பு  வெளியாகும். அந்தவகையில் இந்த ஆண்டு  Gramin Dak Sevaks பணிக்கு நாடு முழுவதும்  காலியாக  உள்ள 38,926 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்.  

இந்திய தபால்துறை

பணியின் பெயர்: Gramin Dak Sevaks
துறை  : இந்திய தபால் துறை
காலிப்பணியிடங்கள்  :  38,926
கல்வித்தகுதி :  10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.  
வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 40 க்கு மிகாமல்  இருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02.05.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022
தேர்ந்தெடுக்கும் முறை  : மெரிட் லிஸ்ட் ( Merit List)முறையில் தேர்வு செய்யப்படும்..  
தேர்வுக்கட்டணம்  :  பெண்கள்,  எஸ்.டி, எஸ்.டி மற்றும்  மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது..  மற்றவர்கள் ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும்..  
விண்ணப்பிக்கும் முறை  : www.indiapost.gov.in மற்றும்  www.indiapostgdsonline.gov.in அகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..  
கட்டணம் செலுத்தும் முறை  : ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்..