35 ஆண்டுகளாக தலைமறைவு: ஜம்மு குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சிக்கினான்!

 
Q

கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் துணை ராணுவ வீரர்கள் இருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில், 35 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அல்டாப் ஹுசைன் ஷேக் என்ற பயங்கரவாதியை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜம்மு ரயில்வே பாதுகாப்புப் படைஒரு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட அல்தாபை அடையாளம் கண்டது. அவரது அடையாளம் மற்றும் வசிப்பிட விவரங்களை கண்டறிந்து விசாரணை நடந்தது. இவன் பெயர் மாற்றத்துடன் பிஜ்பேரா பகுதியில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு அல்டாப் ஹுசைன் ஷேக் என்ற பயங்கரவாதியை ஜம்மு ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

அந்தப் பயங்கரவாதி ஆரம்பத்தில் தலைமறைவாக இருந்து, பின்னர் பல ஆண்டுகளாக தனது அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்ததை போலீசாரிடம் ஓப்புக்கொண்டுள்ளான். பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.