3,552 காவலர் பணியிடங்கள்.. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..

 
தமிழ்நாடு காவல்துறை

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,552 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில்  வெளியானது.  அதன்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் ஆகிய  காலிப் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு (Common Recruitment) விண்ணப்ப செயமுறை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.   இந்தப் பணிகளுக்கு  ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 3,552

இதில்,  10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் .
பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் . இருந்த போதிலும்   இந்த  ஆட்சேர்ப்பில்  துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

கல்வி தகுதி:   குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 TNUSRB
 வயது வரம்பு  :   01.07.2022 அன்று, 18 வயது நிரம்பியவராக  இருக்க வேண்டும். :இதில், குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வுகள் அளிக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவு 26 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 28 வயது
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் 31 வயது
திருநங்கைகள் 31 வயது
ஆதரவற்ற விதவைகள் 37 வயது
முன்னாள் இராணுவத்தினர் மற்றும்  ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் 47 வயது

 விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன்

தேர்வுக் கட்டணம்:  ரூ 250/- ( தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.)

தேர்வு செய்யப்படும் முறை  : எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வு  செய்யப்படுவர்.  

தமிழக அரசு நடப்பாண்டு ( 2022 ) கொண்டு வந்த  புதிய விதிகளின் படி,  இந்த காவலர் தேர்வில் முதன்முறையாக  தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும்.  இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெறும்   விண்ணப்பதாரர்களுடைய முதன்மை தேர்வு  OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

தமிழக காவல்துறை

 மதிப்பெண்கள் ஒதுக்கீடு : 

முதன்மை எழுத்துத் தேர்வு 70 மதிப்பெண்கள்
உடல்திறன் போட்டிகள் 24 மதிப்பெண்கள்
சிறப்பு மதிப்பெண்கள் (NCC,NSS,விளையாட்டு வீரர்) 6 மதிப்பெண்கள் 
மொத்தம் 100 மதிப்பெண்கள்

 மேலும் விவரங்களுக்கு  மாநிலத்தின் அனைத்து மாநகரம் மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.   அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  044-40016200,044-28413658, 9499008445, 9176243899, 9789035725 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.