நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு..!!
Oct 30, 2025, 10:40 IST1761801009156
கேரளா நெய்யாற்றின் கரை பகுதியில் கடற்கரையோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், அப்பகுதி மார்க்கெட்டில் விற்கப்பட்ட சிவப்பு வண்ண நவரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் இதை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 35க்கும் மேற்பட்டவர்கள் நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


