35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
Apr 3, 2026, 11:01 IST1775194271265
தமிழகத்தில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தில் பயன் அடைந்தவர்களின் வீடியோவை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், '' திமுக 2.0 ஆட்சியில் உயர் கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். உலகம் உங்கள் கையில் வந்து சேர திமுகவுக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தர வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
#DravidianModel 2.0-வில், உயர்கல்வி பயிலும் 35 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்!#உலகம்_உங்கள்_கையில் வந்து சேர #VoteForDMK! 🌅pic.twitter.com/IsibCWcPFC
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 3, 2026

