கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தத்தடங்கள்:கடைசியில் ₹5,500 அபராதம் விதித்தது காவல்துறை..!

 
1

.மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார். அவரது கார் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பரவத் துவங்கியது. கார் முழுவதும் லிப்ஸ்டிக் வாயிலாக முத்தத்தடங்கள் பதிக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3,400 முத்தத்தடங்கள் இருந்தன.

இது குறித்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. விதிமுறைகளை மீறி காரில் மாற்றம் செய்ததற்காக ஆதித்யா சிகர்வாருக்கு 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.இத தொடர்பாக ஆதித்யா சிகர்வார் கூறியதாவது: எனது காதலி இதனை செய்தார். காரை நிறுத்திவிட்டு, வெளியே சென்று இருந்தேன். அப்போது இதனை செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகினால் பிரபலம் ஆகலாம் என நினைத்தார். இதனால், கார் முழுதும் முத்ததடங்களால் பதித்தார். இதற்கு 4 மணி நேரம் ஆனது எனத் தெரிவித்தார்.காரில் முத்தத்தடம் பதித்ததற்காக அபராதம் விதித்ததுடன், அதனை கழுவவும் போலீசார் உத்தரவிட்டனர். இதனையடுத்து 4 மணி நேரமாக காதலி லிப்ஸ்டிக் வாயிலாக வரைந்த முத்தத் தடங்கள் அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் அழிக்கப்பட்டது.