34 இயக்குநர்கள்.. 99 படங்கள்.. ஒரு சகாப்தம் முடிந்தது! விஜய்யின் கேரியரை மாற்றிய தயாரிப்பாளரும் இவரே..!

 
1

ராஜஸ்தான் மாநிலம், பியாவர் மாவட்டம், ராய்ப்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜுந்தா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை மதியம் நடந்த சாலை விபத்தில் ஆர்.பி.சௌத்ரி உயிரிழந்தார்.அவருடன் காரில் பயணித்த அவரது மருமகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் பயணித்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதியதில் அவர் இறந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

பிரபல இயக்குநர்கள் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், எஸ்.எழில், ராஜகுமாரன், சசி, பால சேகரன், பிருந்தா சாரதி, ரவி மரியா உட்பட 34 இயக்குநர்களை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தவர் செளத்ரி.

நடிகர் விஜயை வைத்து அவர் தயாரித்த ஷாஜகான், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட திரைப்படங்கள் விஜயின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைபடங்களாகும்.

‎கே .எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த நாட்டாமை, சூர்யவம்சம், லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த ஆனந்தம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களையும் செளத்ரி தயாரித்துள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் "மகுடம்". இந்த திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 வது திரைப்படம் ஆகும். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் காக்கிநாடாவில் நடைபெற்றது. அதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.‎‎சிம்ஹாராசி, சமுத்திரம், சினேகமண்டே இடிரா, நுவ்வு வஸ்தாவனி, சீனு உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார். ‎ஆர் பி சௌத்ரிக்கு ஷில்பா என்ற மனைவியும் ஜித்தன் ரமேஷ், ஜீவா என்கிற இரு மகன்கள் உள்ளனர்.