#BREAKING தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
Updated: May 29, 2026, 19:13 IST1780062210913
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- உயர்க்கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, பொது சுகாதாரம், மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- நிதித்துறை செயலாளராக லலிதா, இணை செயலாளர்களாக கமல் கிஷோர் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நெல்லை புதிய கலெக்டராக ஆனந்த் மோகன் நியமனம்.
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு . பிரதாப் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மக்கள் நல்வாழ்வுத்துறை துணை செயலாளராக அழகு மீனா நியமனம்.
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம்.
- ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக அமுதவள்ளி ஐஏஎஸ் நியமனம்.
- மதுரை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் நியமனம்.
- வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ், செங்கல்பட்டு ஆட்சியராக வீரப்பன் நியமனம்
- தமிழ்நாடு கிராமபுற வளர்ச்சித் திட்ட தலைமை செயல் அலுவலராக வி.ஆர்.சுப்புலட்சுமி நியமனம்
- கன்னியாகுமரி ஆட்சியராக பிரதாப், திருவண்ணாமலை ஆட்சியராக வந்தனா கர்க் நியமனம்
- தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா நியமனம்
- தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ரஞ்சித் சிங் நியமனம்

