தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

 
assembly

தமிழ்நாட்டில் 32 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

iraiyanbu

அதன்படி, தொழில்நுட்ப கல்வி இயக்குனராக விஜய், நில அளவை பதிவுத்துறை இயக்குனராக மதுசூதன் ரெட்டி, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட இயக்குனராக கோவிந்த ராவ், கூட்டுறவுத்துறை பதிவாளராக செந்தில் ராஜ், பதிவுத்துறை ஐஜியாக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக வினீத், வேளாண்துறை ஆணையராக சுப்ரமணியன், கைத்தறித்துறை ஆணையராக விவேகானந்தன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

இதேபோல் அருங்காட்சியக ஆணையராக சுகந்தி, நிதித்துறை இணை செயலாளராக கிருஷ்ணனுன்னி, தமிழ்நாடு இ-சேவை மைய இணை தலைமைச் செயல் அதிகாரியாக ரமண சரஸ்வதி,வணிக வரித்துறை (நிர்வாகம்) கூடுதல் ஆணையராக சுப்புலட்சுமி, தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலராக பால சுப்ரமணியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக சண்முக சுந்தரம்,சர்வ சிஷ்ஷ அபியான் திட்ட இயக்குனராக ஆர்த்தி, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்துஇர்வை துறை கூடுதல் செயலாளராக கஜலட்சுமி, வேளாண் துறை கூடுதல் இயக்குனராக ஸ்ரேயா சிங், நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக லலிதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக ராஷ்மி சித்தார்த் ஸகாடே,  தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் சிறப்பு பணி அதிகாரியாக சிவனருள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமைச் செயல் அதிகாரியாக கவிதா ராமு, வணிகவரித்துறை (மாநில வரி) இணை ஆணையராக லட்சுமி பவ்யா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையராக ஜெசிந்தா, டாஸ்மாக் மேலாண் இயக்குனராக விசாகன், எல்காட் மேலாண் இயக்குனராக அனீஷ் சேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

இதேபோல் தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபிக்கள் 4 பேருக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.