வெள்ளக்காடான ஆந்திரா, தெலங்கானா: 31 பேர் உயிரிழப்பு.. தவிக்கும் மக்கள்..

 
வெள்ளக்காடான ஆந்திரா, தெலங்கானா: 31 பேர் உயிரிழப்பு.. தவிக்கும் மக்கள்.. 

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பாதிப்புகள் மற்றும் வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.  

கடந்த சிக நாட்களாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால் இரு மாநிலங்களிலும் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக ஆந்திராவில் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர், எல்லூரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில்,  மாநிலம் முழுவதும் 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளக்காடான ஆந்திரா, தெலங்கானா: 31 பேர் உயிரிழப்பு.. தவிக்கும் மக்கள்.. 

 166 தற்காலிக முகாம்களில் சுமார் 31 ஆயிரத்து 238 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது.  மேலும் ஒரு லட்சம் ஹெக்டர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விஜயவாடாவில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கி வருகின்றனர். ஆந்திர அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் உட்புற கிராமங்களில் வசிப்போருக்கு உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்டவை சென்று சேரவில்லை என கூறப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை மக்கள் செல்லும் வழியிலேயே அடித்து பிடித்து, வாக்குவாதம் செய்து வாங்கிக் கொள்வதால் உட்புற கிராமங்களுக்கு சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வெள்ளக்காடான ஆந்திரா, தெலங்கானா: 31 பேர் உயிரிழப்பு.. தவிக்கும் மக்கள்.. 

இதேபோல் மழை வெள்ள பாதிப்பால் தெலுங்கானாவில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார்  1. 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும்,  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கம்மம் நகரம் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி  கடிதம் எழுதியுள்ளார். முதற்கட்ட மதிப்பீட்டின்படி சேத மதிப்பு ரூ. 5,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து ரூ.2,000 கோடியை தெலங்கானா அரசு கோரியுள்ளது.

மழையால் பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 120 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன 64 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. இரண்டு மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு பிரிவினரின் 40 குழுக்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.