தேவர் ஜெயந்தி - பசும்பொன்னில் சசிகலா மரியாதை

 
tn

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை விழாவில், சசிகலா  கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார்.

sasikala

இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115வது பிறந்த நாள் மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு வருகின்ற 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்திற்கு கழக பொதுச் செயலாளர், புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

ttn

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர்களின் பிறந்த நாளை, தேவர் ஜெயந்தி விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறோம். இந்த பெருமைக்குரிய விழாவில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அவர்களது வழிவந்த கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பொது மக்களும் ஜாதி, மத பேதமின்றி, அனைவரும் கலந்து கொண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தி, விழாவினை சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.