மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
ஆங்கிலேயரின் அடிமைத்தளையில் காலம் காலமாக சிக்குண்ட அன்னை பாரதம் தற்போது உரிமை பெற்ற நாடாக, சுதந்திரம் பெற்ற நாடாக விளங்குகிறது. இச்சுதந்திரத்தைப் பெற இந்தியா முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும் பாடுபட்டனர். இதில் முதன்மையானவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி, தன்னிகரற்ற தலைவரரக, தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள். நெற்கட்டான்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு செங்கோலோச்சி, ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரர் பூலித்தேவன் அவர்கள், இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் "வெள்ளையனே வெளியேறு” என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீரமுழக்கமிட்டவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய பெருமை மாவீரர் பூலித்தேவன் அவர்களையே சாரும்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாள்!
— M.K.Stalin (@mkstalin) September 1, 2023
அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்க மாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது… pic.twitter.com/1vpONUgHrJ

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன்முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாள்! அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்க மாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்! என்று பதிவிட்டுள்ளார்.