சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000 பணியாளர்கள் - மாநகராட்சி ஆணையர் தகவல்

 
radhakrishnan

சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஏடிஸ் எனப்படும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.  சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இன்று வரை 201 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

dengue

இந்த நிலையில், சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கட்டுமானப் பணிகளில் தேங்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் பெருகுகின்றன; கட்டுமான நிறுவனங்கள், வியாபாரிகளிடம் ஆலோசனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது; காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் வீட்டிலேயே இல்லாமல் முறையான சிகிச்சை பெற வேண்டும் என கூறினார்.