உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 300 சில்வர் குடங்கள் பறிமுதல்
Mar 22, 2026, 16:52 IST1774178567155
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.99,130 மதிப்பிலான 300 சில்வர் குடங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா தலைமையில் போளுர் தொகுதி சோமந்தபுத்தூர் பகுதியில் வாகன சோதனை நேற்று நடைபெற்றது. அப்போது, வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யநாராயணன் என்பவருக்கு சொந்தமான மினி டாடா ஏஸ் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 300-க்கும் மேற்பட்ட சில்வர் குடங்கள் ஏற்றி செல்லப்பட்டிருந்தது. சோதனையில், அவற்றிற்கான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்ததால், ரூ.99,130 மதிப்பிலான சில்வர் குடங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சதிஸ்குமார் முன்னிலையில் போளூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

