வேளச்சேரியில் கோல் பார்பிக் உணவகத்தில் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்

 
Velachery coal barbeque

சென்னை வேளச்சேரியில் பிரபல தனியார் ஹோட்டலில் உணவு அருந்திய 30க்கு மேற்பட்டோர் வாந்தி மயக்கம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Coal Barbecues, Velachery, Chennai | Zomato

சென்னை வேளச்சேரி காந்தி சாலையான 100 அடி சாலையில் உள்ள கோல் பாபிக்கு(coal barbecue) எனும் பிரபல தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் சென்னை பல்லாவரத்தில் உறவினர் ஒருவருடைய வீட்டு திருமணம் நடைபெற்றது, அதனை ஒட்டி நேற்று உணவு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு உணவு சாப்பிட வந்துள்ளனர். இந்த உணவு பார்ட்டிக்கு திருமணத்திற்கு வருகை தந்த தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த உறவினர்கள் மற்றும் சென்னை பெருங்களத்துரை சேர்ந்த உறவினர்கள் 60-க்கும் மேற்பட்டோர் உணவகத்தில் உணவினை ஆர்டர் செய்து சாப்பிட வந்துள்ளனர். 

உணவகத்தில் பல்வேறு அசைவ உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் உணவு அருந்தியவர்கள் சிலர் திடீரென அடுத்தடுத்து வாந்தி எடுத்துள்ளனர். சுயநினைவு இன்றி சிலர் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்டவருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

nearbuy

இச்சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் மற்றும் இரவு பணி போலீசார் உணவக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தர்ராஜன் தலைமையில் உணவகத்தை சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் குறிப்பிட்ட உணவகத்தில் தேதி குறிப்பிடாத இறைச்சிகள் மற்றும் கெட்டுப் போன உணவுகள் இருந்ததை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டறிந்து கீழே கொட்டினர். இந்த சம்பவம் குறித்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்