செல்பி மோகத்தால் காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள்!!

 
tn

காவிரி வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு  பத்திரமாக மீட்கப்பட்டனர்.

tn
மேட்டூர் அணை நிரம்பி விட்ட நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  மேட்டூர் அணையில் இருந்து நேற்று  மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கன அடி விதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.  இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதைறிந்து அணையில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை காண்பதற்காக மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மக்கள் கூடினர் . அப்போது 16 கண் மதகு வழியாக வெளியேறும் வெள்ளத்தை கண்டு ரசித்த மக்கள் அங்கு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

tn
அத்துடன் மேட்டூர் அணை மின் நிலையத்தை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை காண்பதற்காக சேலம் தாரமங்கலத்தில் இருந்து வந்திருந்த 3  இளைஞர்கள் கரையில் இருந்து ஆற்றினுள் சற்று தூரத்தில் இருந்த பாறை மீது ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கரைக்கு எளிதில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு பறையிலேலேயே சிக்கி கொண்டனர்.   இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் நீண்ட கயிற்றின் ஒரு முனையில் தங்களை கயிற்றால் கட்டிக்கொண்டு காற்றடைத்த மிதவை வளையத்துடன் ஆற்றினுள் இறங்கி , மூன்று இளைஞர்களையும் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில் இளைஞர்கள் மூவரையும் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிறப்பு காவல் படையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.