தற்காலிக பேராசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு!!

 
tn govt

தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

college

இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற பணிகள் வழங்க ஏதுவாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலமாக பணியாற்றி வரும் 4681 பேராசிரியர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.