போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை - மத்திய அரசு எச்சரிக்கை

 
போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை - மத்திய அரசு எச்சரிக்கை

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையான நிலையில், மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ - மத்திய அரசு எச்சரிக்கை

நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தியது. பெண்களை ஆபாசமாக சித்தரித்து DEEP FAKE வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளடு. இதுபோன்ற போலி வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த அடுத்த 24 மணிநேரத்திற்குள் சம்பந்தபட்ட வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னதாக போலி வீடியோ தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள நடிகை ராஷ்மிகா, “ஆன்லைனில் பகிரப்படும் எனது Deepfake video பற்றி பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது. தொழில்நுட்பம் இவ்வாறு தவறாக பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மிகவும் பயமாக உள்ளது. எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், நலவிரும்பிகளுக்கு ஒரு பெண்ணாக ஒரு நடிகையாக நன்றி தெரிவித்துக் கொள்கிறென். நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும்போது இவ்வாறு நடந்திருந்தால் அதை எப்படி சமாளித்திருப்பேன் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இதுபோன்ற அடையாளத் திருட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன்பாக இதற்கு தீர்வு காண வேண்டும்” எனக் கூறியுள்ளார்.