குரங்குகளுக்கு தின்பண்டம் வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை - வனத்துறை

 
monkey

குரங்குகளுக்கு திண்பண்டம் வழங்கினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. 

Food cooperation in monkeys | Meer

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா தளமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் வாகனங்களுடன் வந்து குரங்குகளை தொந்தரவு செய்வது, அதற்கு தின்பண்டங்கள் போடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. குரங்குகளுக்கு தின்பண்டம் போட வேண்டாம் என விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதையும் மீறி குரங்குகளுக்கு தின்பண்டங்கள்கள் அளித்தாலோ, விலங்குகளை தொந்தரவுகள் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டாலோ இந்திய வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் திருத்தப்பட்ட 2022 வனஉயிரினப் பாதுகாப்பு சட்டங்களின்படி வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, வழக்குபதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த நேரிடும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் இந்த சட்டதில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை  இயற்கையோடு சேர்ந்து வாழவழிவகை செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று சரணால சாலைகளில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாகனத்தினை இயக்குமாறும், பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் வீசிவிட்டு செல்லவேண்டாம் எனவும் கோடியக்கரை வனச்சரக அலுவலர்  அயூப்கான் தெரிவித்துள்ளார்.