சரக்கு கப்பலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளிகள் பலி! தூத்துக்குடியில் சோகம்
தூத்துக்குடியில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மிதவை கப்பலில் பணியில் இருக்கும் போது விஷவாயு தாக்கி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்திப் குமார், மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த ஜெனிசன் தாமஸ் மற்றும் நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து Am ahamad and co நிறுவனத்திற்கு சரக்கு எடுப்பதற்காக முக்தா இன்ஃப்ரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பார்ஜ் பழைய துறைமுகத்திற்கு வந்திருக்கின்றனர் இந்த நிலையில் பார்ஜின் கீழ்ப்பகுதியில் மிதவைக்காக அடிப்பகுதியில் நான்கில் ஒரு பங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் தேங்கிய தண்ணீரில் வாயு உருவாகி இருந்த நிலையில் அதை அகற்ற சில மணி நேரங்களுக்கு முன்பே அந்தப் பகுதியை திறந்து வைத்திருப்பது வழக்கமாம் இந்த நிலையில் நீண்ட நாட்களாக தண்ணீரை சுத்தம் செய்யாததால் பழைய நீரை மாற்றி விட்டு புதிய நீர் விடுவது வழக்கம் இந்த நிலையில் இன்று அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மூன்று நபர்களும் அந்த பார்ச்சின் அடிப்பகுதியை திறந்து உடனடியாக மூன்று பேரும் பார்ஜின் அடிப்பகுதியில் தேங்கி இருக்கக்கூடிய அந்த பகுதியை சுத்தம் செய்ய இறங்கிய நிலையில் ஒருவர் மயக்கம் அடைந்து இருக்கிறார் அதை கண்டதும் மேலும் ஒருவர் இறங்க அவரும் மயக்கம் அடைந்து இருக்கிறார், மூன்றாவது நபர் இறங்கும்போது பார்ஜின் அடிப்பகுதிக்கு செல்லக்கூடிய கதவு துரதிஷ்டவசமாக கைபட்டு மூடிவிட்டதாக கூறப்படுகிறது. கதவு உள்பக்கமாக மூடியதால் வேறு யாரும் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து பார்ஜின் அடிப்பகுதிக்கு செல்லும் கதவை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி மூன்று பேரின் உடலையும் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்திப் குமார், மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த ஜெனிசன் தாமஸ் மற்றும் நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி பரிதாபமாக பலியானார்கள். சாரோனின் தந்தை சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த சோகம் மறைவதற்கு முன்பாக வீட்டின் ஒரே மகனான சாரோனும் இன்று விஷவாயு தாக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி விஷவாயுவை வெளியேற்றி உடலை மீட்டனர் இதை அடுத்து உடலை கைப்பற்றி மத்திய பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த நகர உதவி கண்காணிப்பாளர் மதன் மூன்று பேர் உடலையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

