உயர் அழுத்த மின்வயர் அருகே நின்று செல்போனில் பேசிய 3 பெண்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்

 
blur image women sleeping

தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கிய மூன்று வடமாநில பெண்கள் செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் கவலைக்கிடம், இருவர் லேசான காயமடைந்தனர்.

சென்னை தாம்பரம் கடப்பேரில் நடராஜன் பெண்கள் தங்கும் விடுதியின் மெப்ஸ் வளாகத்தில் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிசெய்யும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும் கும் குமாரி(19) ஊர்மிலா, பூனம் ஆகிய மூவர் உள்ளிட்ட 30 பேர் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் தங்கி உள்ள விடுதியின் மிக அருகே உயர் அழுத்த மின்சார உயர் செல்வதாக தெரிகிறது. கும் கும் குமாரி அந்த கட்டிடத்தின் மாடியில் பக்கவாட்டில் நின்று பவர் பேங்கில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியுள்ளர். அவருடன் மற்ற இருவரும் இருந்த நிலையில், மின் கம்பியை உரசாத நிலையில் செல்பேசிய கும் கும்குமாரி மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. அதன் தாக்கம் அருகில் இருந்த இருவரையும் தாக்கிய நிலையில் மூவரும் காயமடைந்தனர்,

இதில் கும் கும் குமாரிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிக்கிசை அளிக்கப்பட்டு 75 சதவீத தீக்காயத்துடன் சென்னை கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் ஊர்மிலா, பூனம் ஆகிய இருவருக்கும் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்கிசை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து  ஆடை ஏற்றுமதி நிர்வாத்தில் பணி செய்யும் தென்றல் என்பவர் கூறுகையில், மின்சாரம் தாக்கிய  மூவரையும் மீட்டு சிக்கிசை அளித்துவருவதாகவும், கும் கும் குமாரியின் பெற்றோர்களை விமானத்தில் சென்னை வர அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபோல் உயர் அழுத்த கம்பிகள் செல்லும் பகுதியில் 5 மீட்டர் தூரம் தள்ளிதான் இருக்க வேண்டும், ஆனால் அந்த கட்டிடம் 3 மீட்டர் தூரத்தில் உள்ளது, அதே வேலையில் செல்போன் பேசியதால் ஒயர் இல்லாமலே நேரிடையாக மின் காந்த அலைகளால் தொடர்பு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.