3 பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு

 
rn ravi

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ravi

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய கமிட்டி அமைத்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வுக்குழுவை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் முதன்முறையாக யூஜிசியின் பிரதிநிதி இடம்பெற்றுள்ளார்.

ஆளுநர், தமிழக அரசு, பல்கலைக்கழக சிண்டிகேட் சார்பிலான பிரதிநிதிகளுடன் யூஜிசியின் பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளார். துணைவேந்தர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் நிலையில், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே நிபந்தனை விதித்திருந்தார். யுஜிசி விதியை மட்டும் பின்பற்றினால்போதும், உறுப்பினரை சேர்க்க தேவையில்லை அரசு கடிதம் எழுதியிருந்தது.

துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு நேற்று கடிதம் எழுதியிருந்த நிலையில்,  தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினர்களை ஆளுநர் ரவி நியமித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.