3 டிக்கெட் பரிசோதகர்கள் ரூ. 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்து சாதனை - தெற்கு ரயில்வே பாராட்டு.

 
3 டிக்கெட் பரிசோதகர்கள் ரூ. 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்து சாதனை - தெற்கு ரயில்வே பாராட்டு.


சென்னை மண்டலத்துக்குட்பட்ட  ரயில்  நிலையங்களில்  டிக்கெட் பரிசோதகர்கள் 3 பேர் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதத் தொகை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தெற்கு ரயில்வெ தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தெற்கு ரயில்வே, “சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட , சென்னை மண்டலத்தில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1.55 கோடி அபராதத் தொகையை வசூலித்துள்ளார். டிக்கெட் எடுக்காமல் பயணித்தது, முன்பதிவு செய்யாமல் அதிக லக்கேஜ்  எடுத்து வருவது போன்ற மொத்தம் 27,787 வழக்குகளை பதிவு செய்து அவர் இந்த அபராதத் தொகையை வசூலித்திருக்கிறார்.

3 டிக்கெட் பரிசோதகர்கள் ரூ. 1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்து சாதனை - தெற்கு ரயில்வே பாராட்டு.

 இதேபோல், தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1.03 கோடி அபராதத் தொகையை வசூலித்து, நாடு முழுவதிலும் உள்ள பெண் டிக்கெட் பரிசோதகர்களில் அதிக அளவு அபராதத் தொகையை வசூலித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் மொத்தம் 17,919 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்.  மூத்த டிக்கெட் பரிசோதகர் சக்திவேல்,  18,384  வழக்குகள் பதிவு செய்து மொத்தம்  ரூ.1.10 கோடி அபராதத் தொகை வசூலித்துள்ளார்.   இதன்மூலம், இவர்கள் மூவரும் ஒரு கோடி கிளப்பில் உறுப்பினர்களாகி உள்ளனர்” என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.