பிளஸ் 2 பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு

 
exam

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வில் 3 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் 2 ஆண்டுகளுக்கு பின் பொதுத்தேர்வுகள் நடைபெற்றுவருகிறது. இந்த தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுதத் தடை விதிக்கப்படும். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இன்றைய ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என்று 3 பேர் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு, பிடிபட்டுள்ளனர்