3 பௌர்ணமி விரதம்.. தீராத வினைகளைத் தீர்க்கும் திருத்தலம்... சென்னையில் இருக்கும் அபூர்வ கோவில்..!

 
1

சென்னையில்  மைந்துள்ளது வீரபத்ர சுவாமி திருக்கோவில், இது ஒரு பிரார்த்தனை தளமாக உள்ளது.

இங்கு மூன்று பௌர்ணமி தினங்களில் அடிப்படையாகக் கொண்டு வீரபத்திரர்க்கு வெற்றிலை மாலை சாத்தி அர்ச்சனை செய்து மனம் உருகி வேண்டி வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பி வழிபாடு செய்து வருகின்றனர்.

இத்தலத்தில் கல்யாண வீரபத்திரராக அருள்பாலிக்கிறார். விதியை மாற்றும் வீரபத்திரர் என இவரை பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். வீரபத்திரரை வணங்க வெற்றிலை கொடியுடன் கூடிய இத்தலத்தை அமைந்த உடன் அவருக்கு மனதில் இனம் புரியாத அமைதி ஏற்பட்டது. வெற்றிலையின் நறுமணம் அவருக்கு மேலும் அமைதியை தந்ததால் அன்று முதல் வெற்றிலை அவருக்கு பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தளத்தில் சினம் தணிந்த வீரபத்திரர் சாந்த மூர்த்தி ஆனவுடன் தச்சாயினி ஆன பார்வதி தேவி அவர் முன் தோன்றிய தன் வளர்ப்பு தந்தையின் அறியாமையை மன்னித்து அவரை உயிர் பெற செய்யுமாறு வேண்டியதாக தல வரலாறு கூறுகிறது.

ஆலயத்தில் உள்ள அனைத்து விநாயகர் பெருமான்களும் வடக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது எந்த கோவிலில் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இங்கு வீரபத்திரர், விருப்பாட்சீஸ்வரர், விசாலாட்சி, அபயாம்பாள், சரபேஸ்வரர், சீர் கொண்டு வந்த பெருமாள், சண்டிகேஸ்வரர், சிவசுந்தர விநாயகர், சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, ஆதிசங்கரர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, கால வீர பைரவர், விருட்ச கணபதி, என அருளாற்று புரிந்து வருகின்றனர்.

சிறப்பம்சங்கள்:

  • அமைவிடம்: மயிலாப்பூர், சென்னை.
  • மூலவர்: கல்யாண வீரபத்திரர்.
  • சிறப்பு வழிபாடு: பௌர்ணமி அன்று வெற்றிலை மாலை மற்றும் அர்ச்சனை.
  • நம்பிக்கை: விதியை மாற்றும் திறன், தடைபட்ட காரியங்கள் நிறைவேற வழிபடப்படுகிறது.