மதியம் 3 மணி நிலவரம்- இரு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த கம்யூனிஸ்ட்

 
ச்

தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் உள்ள  இடதுசாரிகள் இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது

மதியம் 3 மணி நிலவரப்படி, தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா 60,078 வாக்குகள் பிடித்து முதல் இடத்தையும், 50,075 வாக்குகள் பிடித்து திமுக வேட்பாளர் இரண்டாம் இடத்தையும், அதிமுக வேட்பாளர் 38,760 வாக்குகள் பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 4,787 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 1,065 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோல் மதியம் 3 மணி நிலவரப்படி, மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 58,133 வாக்குகள் பிடித்து முதல் இடத்தையும், 41,531 வாக்குகள் பிடித்து திமுக வேட்பாளர் இரண்டாம் இடத்தையும், அதிமுக வேட்பாளர் 35,951 வாக்குகள் பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,603 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 1,376 வாக்குகளும் பெற்றுள்ளனர். தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் உள்ள  இடதுசாரிகள் இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடதக்கது.