ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் பரிதாப பலி

 
f

ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து மூன்று பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் .  

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரின் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.  மின் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில், வெங்கட்ரமணன் என்பவருக்கு திதி கொடுப்பதற்காக துபாயிலிருந்து வந்த மூன்று பேரும் குளிர் பதன பெட்டி வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .  பலத்த காயமடைந்த பாரதி,  ஆராதயா(6) ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

b

 மின் கசிவு காரணமாக குளிர்பதனை பெட்டி வெடித்ததில் மூச்சு திணறி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.  இந்தக் குளிர்பதனப்பெட்டி வெடித்து நடந்த விபத்தில் கிரிஜா( 63) அவரின் தங்கை ராதா(55), ராஜ்குமார்( 48) ஆகியோர் உயிரிழந்தனர்.

 துபாயிலிருந்து நேற்று முன் தினம் தான் மூன்று பேரும் சென்னை திரும்பி இருக்கிறார்கள்.   மூன்று பேரும் ஒரே அறையில் படுத்து தூங்கி இருக்கிறார்கள்.  அந்த அறையில் இருந்து புகையாக வெளிவந்திருக்கிறது.  பக்கத்து அறையில் படுத்து தூங்கிய பார்கவி என்பவர் எழுந்து சென்று மூன்று பேரும் தூங்கி அறையை திறக்க முயன்றிருக்கிறார்.   அப்போது திறக்க முடியவில்லை . 

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது மூன்று பேரும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.