யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் கோரி மனுதாக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட மூவரின் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்திக், ஆனந்த் ஆகிய மூவரின் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை பாலியல் ரீதியில் பயன்படுத்தியதாகவும் அதனை வீடியோ எடுத்ததாகவும் கடந்த 29ஆம் தேதி திவ்யா கள்ளச்சி, சித்ரா,கார்த்தி, ஆனந்த் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கின் முதல் குற்றவாளியான திவ்யா கள்ளச்சி, இரண்டாம் குற்றவாளியாக கார்த்திக் நான்காம் குற்றவாளியான ஆனந்த் ஆகியோர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வழக்கின் மூன்றாவது குற்றவாளியான சித்ராவுக்கு ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை 7- ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தொடர்பாக திவ்யா கள்ளச்சியின் வழக்கறிஞர் கோடிமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கு மேற்படி மூவருக்கும் ஜாமீன் வழங்க கோரி தற்போது மனு தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பாக விசாரணை நடைபெறும் போது ஒரு கோணத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போது பேர் கோணத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்விற்கு பின்னால் இருக்கும் சித்ரா என்பவர் அரசியல் பின்புலத்துடன் இருப்பதால் இவ்வலக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவ்வாறு சிபிசிஐடி விசாரித்தால் வீடியோவின் உண்மை தன்மை வெளிக் கொண்டு வரப்பட்டு இவ்வழக்கில் இருந்து திவ்யா கள்ளச்சி, கார்த்திக், ஆனந்த் மூவரும் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.