ஆபாச கேள்வியால் இளம்பெண் தற்கொலை- யூடியூப் தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது

 
ஆபாச வீடியோ

யூடியூபில் அனுமதியின்றி காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலை முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image


சென்னையில் ஆபாசமாக கேள்வி கேட்டு அதை அனுமதியின்றி யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்ததால் 23 வயது இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Veera Talks Double X என்ற யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஸ்வேதா, ஒளிப்பதிவாளர் மற்றும் உரிமையாளர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாசமான கேள்வியை ஸ்வேதா கேட்டதும் அதனை யூடியூபில் போடக்கூடாது என அப்பெண் கூறியதை மீறி வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. பேட்டியை அனுமதியின்றி ஒளிபரப்பமாட்டோம் என உறுதி அளித்துவிட்டு சட்ட விரோதமாக இளம் பெண்ணின் பேட்டியை வெளியிட்டதால் மன உளைச்சலில் இளம் பெண் தற்கொலை முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து Veera Talks Double X என்ற யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஸ்வேதா, ஒளிப்பதிவாளர் மற்றும் உரிமையாளர் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.