விசிகவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

 
tn

திருச்சியில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் தொண்டர்கள் வீடு திரும்பிய  வேன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நாரையூர் கிராமம் அருகே சேலம் - விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

accident

இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வேன் மீது சரக்கு லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். சிதம்பரம் அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கினர். காயமடைந்த 19-க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

death

 உயிரிழந்த உத்தர குமார், யுவராஜ் மற்றும் அன்புச்செல்வன் ஆகியோரின் உடலை கைப்பற்றிய போலீசார் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.