வெடி விபத்தில் 3 பேர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 
stalin stalin

வெடிவிபத்தில் 3 பேர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

விருதுநகர் மாவட்ட தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவு :- 

விருதுநகர் அருகே வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.


 

வெடிவிபத்தில் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோரின் வாரிசுகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.