ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு! தீபாவளியில் நேர்ந்த சோகம்

 
ச்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் நேற்றிரவு ஏரிக்கரை மீது சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் மூழ்கியது. காரில் பயணித்தவர்கள் இருவர் பலியாகியுள்ள  நிலையில் , மேலும் ஒருவர் உடன் சென்றதாக விசாரணையில் தெரிவந்ததை அடுத்து இன்று காலை நீரில் மூழ்கியவரை தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர் சுமார் இரண்டு மணி நேரம் தேடலுக்கு பின் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் வெங்கடாபுரம் பகுதியில் இருந்து பாகலூர் நோக்கி ஏரிக்கரை மேல் வந்த கார் லேசான மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரிக்குள் விழுந்தது, தகவல் அறிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடனடியாக கிரேன் வாகன உதவியுடன் காரை மீட்டனர் காருக்குள் இருந்தவர்கள் மூச்சு திணறி உயிரிழந்து உள்ளனர். இருவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவர்கள் யார் என குறித்த விசாரணையில் மேற்கொண்டதில் காரில் பயணித்தவர்கள் ஓசூரைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 30 லிண்டோ வயது 29 என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் போலீசார் தீவிர விசாரணையில் காரில் பயணித்தவர்கள் மூன்று பேர் என தெரிய வந்தது. இந்த நிலையில் மேலும் அவரை காலை வேளையில் தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில் சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் வயது 25 அவருடைய உடலையும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.