கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

 
கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓசூரில் உள்ள டாடா தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் விழுந்து 3 பேர் பலியாகினார். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே  3 பேரும் உயிரிழந்தனர்.  3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகக்கப்பட்டுள்ளது.  இறந்தவர்கள் தருமபுரியை சேர்ந்த இளைஞர்கள் சாரதி குமார், அக்மல்பாபு பாய், காவிரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.  

செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை தொழிலாளர்கள் சுத்தம் செய்துள்ளனர்.  அப்போது விஷவாயு தாக்குதியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.