ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது

 
போலீஸ்க்கு தங்க கட்டிகளை வாரி வழங்கிய ஜெம் வீரமணி?- பகீர் திருப்பம்

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி வழக்கில் மேலும் மூன்று பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். கைதான பாபு, லாசர், பார்த்திபன் ஆகிய 3 பேரும், வீரமணியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியவர்கள் என்றும், சிறுமிகளை அழைத்து வர உதவியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்பு பிரிவில் பெறப்பட்ட Pendrive-ல் ஜெம் கிரணைட் தொழிலதிபர் வீரமணி என்பவர் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரது வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக Pendrive-வில் பதிவாகியிருந்த வீடியோவில் வீரமணி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டும் இவ்வழக்கில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற மேலும் ஒரு வீடியோவை வைத்திருந்தது தொடர்பாக அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு, மேற்படி நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறை இயக்குநர் / படைத் தலைவர் (DGP/HoPF), தமிழ்நாடு அவர்களின் உத்தரவின் பேரில் மேற்படி போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு (Special Investigation Team) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜெம் வீரமணி மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு 02.10.2026 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி ஐந்து வழக்குகளில் புலன் விசாரனை மேற்கொண்டதில், ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரணைட் வீரமணியின் ஓட்டுநர் கள் 1.லாசர், 2.பார்த்திபன் மற்றும் 3.பாபு ஆகியோர்கள் அடையாளம் காணப்பட்டு இன்று (05.10.2026) கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட ஐந்து வழக்குகளில் சம்மந்தபட்ட ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் Gem Granite அதிபர் வீரமணியிடம் லாசர் என்பவர் 23 வருடங்களாகவும், பாபு என்பவர் 8 வருடங்களாகவும் மற்றும் பார்த்திபன் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். ஜெம் வீரமணியின் குற்ற செயல்களுக்கு துணை போனது பற்றியும், அது தொடர்பாக அவர்களுடைய வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு, 8 செல்போன்கள் மற்றும் 55 ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.