டாஸ்மாக் பார்களுக்கு மேலும் 3 மாத அவகாசம்..!
Jul 1, 2026, 15:39 IST1782900575585
தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கு புதிய டெண்டர் விடாமல் தவெக அரசும் 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 2,000-க்கும் மேற்பட்ட பார்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் உரிமங்கள் நேற்றுடன் காலாவதியான நிலையில், அவற்றை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், திமுக அரசும் 6 மாதம் அவகாசம் அளித்திருந்தது.

