912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு..

 
912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு.. 

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு,  மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.  

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.  அவ்வாறு ஆசிரியர் தகுதி தேர்வு  நடத்தப்படாத சமயங்களில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் போது, அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறது. இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் எதுவும் கிடைக்காது.  ஆனால், நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் போது தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

912 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு.. 

அந்தவகையில் 912 ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 912 ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.