பாமக பிரமுகரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது

 
murder

தியாகதுருகம் அருகே  அசைவம் சமைத்து சாப்பிடலாம் என கூறிக் பா.ம.க.பிரமுகரை அழைத்து சென்று தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Murder

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மேட்டுக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தை சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்சி கொடிகம்பத்தை மேட்டுக்குப்பத்தை சேர்ந்த பா.ம.க. கிளை செயலாளரான ராஜேஷ் உள்ளிட்ட சிலர் சேதப்படுத்தியதாக நாம் தமிழர் கட்சியினருக்கு சந்தேகம் ஏற்பட்டடு. 

இந்த நிலையில் தியாகதுருகத்தில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு பா.ம.க. கிளை செயலாளர் ராஜேஷ் வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களான மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராமநாதன், ஏழுமலை, பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த  மாணிக்கம்  ஆகியோர் ராஜேசிடம் அசைவம் சமைத்து சாப்பிடலாம் என கூறி பீளமேடு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்தியது தொடர்பாக ராஜேஸிடம் கேட்டு தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவரை தாக்கியதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த அவர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதன், வீரன், மாணிக்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஏழுமலையை தேடி வருகின்றனர்.