பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

 
stalin

விருதுநகர் மாவட்டம்  வையம்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

fire accident

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. மஞ்சள்ஓடைபட்டியில் உள்ள சோலை என்ற இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில்  பட்டாசு உரிமையாளர் கருப்பசாமி , செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர்  பலியாகிய நிலையில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்குச் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

stalin

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் வையம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு,  தலா ஒரு லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.