கடலூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

 
விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாப பலி.. தமிழகத்தில் தொடரும் மரணங்கள்!

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அடுத்த கானூர் என்ற இடத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் செப்டிக் டேங்க் சென்டரிங் பிரிக்கும் பணி நடைபெற்றது. அப்போது வாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி(40), கட்டிட மேஸ்திரி பாலசந்தர்(32), சக்திவேல்(25) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

இந்தியாவிலேயே விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. கல்வியில் முன்னேறிய மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்வது வேதனையிலும் வேதனை. தூய்மை பணியாளர்களிடம் போதிய விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தாதே இதற்கு காரணம் என தெரிகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் எந்த கூட்டமும் நடத்தவில்லை, முறையாக செயல்படவும்வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான உபகரணங்கள் தேவைப்படுவோர் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்ததொடர்பு கொண்டு தொழில் நிறுவனங்கள் அளிக்கும் கூட்டாண்மை சமூக பங்களிப்பு திட்டத்தில் இருந்து கிடைக்கும் நிதியில் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாத உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தூய்மை பணியாளர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் முறையான பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் தொட்டியில் இறங்க மாட்டேன் என்று உறுதி ஏற்றால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.