மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 3 போ் உயிரிழப்பு! சிவகங்கையில் சோகம்

 
ச்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாசிமக பெருவிழா மஞ்சுவிரட்டில், காளைகள் முட்டியதில் மூவர் உயிரிழந்தனர்.

ச்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாசிமக பெருவிழா மஞ்சுவிரட்டில், காளைகள் முட்டியதில் மூவர் உயிரிழந்தனர். ராமநாதன் (23), சுந்தரராஜ் (48), வேடிக்கை பார்க்க வந்த புலம்பெயர் தொழிலாளி ஆகிய மூவர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டபோது பார்வையாளர்களை காளைகள் முட்டியதில் 75 பேர் காயமடைந்தனர். பார்வையாளர்களையும் காளைகள் முட்டித் தூக்கியதாக கூறப்படுகிறது. அரளிப்பாறை பகுதியில் அரசு அனுமதியுடன் மஞ்சுவிரட்டு  நடந்த நிலையில் முன்னதாக வயல்வெளிகளில் உரிமையாளர்கள் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட்டதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.