2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

 
accident

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையம் பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் எதிர் எதிரே வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், அதில் ஒரு இருசக்கர வாகனம் அதிவேகத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதனால் இரண்டு இருசக்கர வாகனங்களில் பயணித்த 4 பேருக்கும் பயங்கர காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.  

இந்த விபத்தில் சிவக்குமார், சஞ்சய், வினோத் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.