ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வரப்போகும் 3 குட் நியூஸ்..!

 
ration card

முதலாவது குட் நியூஸ் :

திமுக ஆட்சியைப் பிடித்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் என்ற அறிவிப்பு வரும். அதிமுக ஆட்சியைப் பிடித்தால் குல விளக்குத் திட்டம் குறித்த அறிவிப்பு வரும். இந்த இரு திட்டங்களிலுமே பெண்களுக்கு மாதம் ரூ.2000 கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் ஏகபோகமாக இருக்கிறது. அதேநேரத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாதம் ரூ.2000 கிடைக்கும் என்பதிலும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதேநேரத்தில், இத்திட்டத்தில் தங்களையும் சேர்த்த்துக் கொள்ள வேண்டும் என புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், ஏற்கனவே விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் காத்திருக்கிறார்கள்.  


அது தொடர்பான அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. மேலும், இத்திட்டத்தில் யாரை எல்லாம் புதிதாக சேர்க்கலாம் என்ற விதிமுறைகளில் மாற்றம் ஏதேனும் இருப்பின் அது தொடர்பான அறிவிப்பையும் புதிதாக பொறுபேற்கும் தமிழ்நாடு அரசு வெளியிடும்.  

2வது குட் நியூஸ் :

இந்த அறிவிப்புகளுக்கு அடுத்தபடியாக, திமுக ஆட்சி என்றால் 8000 ரூபாய் கூப்பன் குறித்த அறிவிப்பு வெளியாகும். இத்திட்டத்தில் பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் கூப்பன் வைத்து விரும்பிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.  இந்த அறிவிப்புகளுக்கு அடுத்தபடியாக, திமுக ஆட்சி என்றால் 8000 ரூபாய் கூப்பன் குறித்த அறிவிப்பு வெளியாகும். இத்திட்டத்தில் பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் கூப்பன் வைத்து விரும்பிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.  


3வது குட் நியூஸ் :

இதுதவிர முதியோர் உதவித்தொகை உயர்வு, புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களில் மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படுவது குறித்த அறிவிப்பும் வெளியாகும்.ரேஷன் கடைகளில் இன்னும் கூடுதலாக சில பொருட்கள் வழங்கப்படுவது, அவை விலையில்லாமல் அல்லது சலுகை விலையில் கொடுப்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகும்.  

எனவே, இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல அதிரடி அறிவிப்புகள் காத்திருக்கின்றன. 


அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த அறிவிப்புகளால் எந்த பயனும் இல்லை. ஏனென்றால் வருமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்காகவே இந்த திட்டங்களை எல்லாம் அதிமுக மற்றும் திமுக அறிவித்துள்ளன. அதனால், யார் ஆட்சி அமைத்தாலும் அவரவர் பொதுமக்களுக்காக செய்வதாக கூறிய இந்த கவர்ச்சி திட்டங்கள் எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு வரப்போவது உறுதி.