சட்டவிரோத மின்வேலி! 3 யானைகள் பரிதாப பலி! விவசாயி கைது

 
e

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.  இந்த சம்பவத்தை அடுத்து சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து இருந்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

 தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டகள்ளி அடுத்த காலிகவுண்டன் கொட்டாய் கிராமம்.  இக்கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற 50 வயது விவசாயி 2 ஏக்கர் நிலத்தில் சோளம், ராகி, தென்னை பயிர்கள் சாகுபடி செய்து இருக்கிறார்.  இந்த விவசாய நிலத்தில் இரவு பகுதியில் காட்டு யானைகள் , காட்டு பன்றிகள் வந்து விடுவதால் இந்த தொல்லையை சமாளிப்பதற்காக விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்சார வயர்கள் அமைத்து இருந்திருக்கிறார். 

எல்

 இந்த மின் ஒயர்கள் நேரடியாக மின்சார கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டு வந்திருக்கிறார்.   இரவு நேரத்தில் அந்த வழியாக தண்ணீர் தேடி வந்த ஐந்து காட்டு யானைகள் கூட்டம் இந்த மின்சார வயரில் சிக்கி இருக்கிறது.   இதில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் யானை,  ஒரு ஆண் யானை என்று மூன்று காட்டு  யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளன .  இரண்டு குட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றன .

இதை அடுத்து வனத்தில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம விவசாய நிலத்திற்கு வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டாமல் வனத்துறையினர் போக்குகாட்டியும் அலட்சியமாக செயல்பட்டால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் எச்சரித்து வருகின்றனர்.

 இந்த சம்பவத்தை எடுத்து மூன்று யானைகள் ஒரே நேரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவத்தை சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்தது நின்று அனுதாபம் தெரிவித்து வருகின்றனர் .  இதை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பந்தப்பட்ட விவசாயி முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.