சுற்றுலா வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து.. 3 பேர் பலி...

 
accident

சுற்றுலா பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

நாமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து  சுற்றுலா வாகனம்  ஒன்று வந்துள்ளது.  அதேபோல் எதிர் திசையில் ராமநாதபுரத்தில் இருந்து வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது.  எதிர்பாராத விதமாக ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே வேன் மற்றும் சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது.  வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய இந்த கோர விபத்தில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும்   விபத்தில் சிக்கி  10க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்.  

இறப்பு

பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் விபத்து குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.