குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை பலி

 
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை பலி

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து  பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை  உயிரிழப்பு-உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை திருநீர்மலை அடுத்த இரட்டமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (35) இவருடைய மனைவி ஆனந்தி (29) கடந்த திங்கட்கிழமை அன்று பிரசவித்திற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஆனந்திக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மூன்று நாட்களாக இன்குபேட்டரில் வைத்து தாயிடம் குழந்தையை காட்டாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கபட்டு வந்துள்ளது. இந்தநிலையில் திடிரென இன்று காலை குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்  சாலை மறியலில்  ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த குரோம்பேட்டை போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்பட்டுள்ளது.